நம்மால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தடுக்க முடிந்ததா?.. முஸ்லீம் மத குரு வேதனை!

Jun 29, 2023,12:35 PM IST
டெல்லி: முஸ்லீம்கள் என்ன கருத்தைக் கூறினாலும் அதை யாரும் ஏற்கப் போவதில்லை. நம்மால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தடுக்க முடிந்ததா.. இல்லையே... இப்போது பொது சிவில் சட்டம் பற்றிப் பிரதமரே பேசுகிறார்.. நம்மால் அதை தடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார் ஜமாய்த் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவரான மெளலானா அர்ஷத் மதானி.

பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசத் தொடங்கி விட்டது. பிரதமரே அதுகுறித்து போபாலில் நடந்த பாஜக கூட்டத்தில் விரிவாகப் பேசியுள்ளார். இது இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. 



இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முஸ்லீம் அமைப்புகள் ஆலோசனையில் இறங்கியுள்ளன. இந்த பின்னணியில் ஜமாய்த் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவரான மெளலானா அர்ஷத் மதானி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே மிகப் பெரிய முஸ்லீம் அமைப்பு இதுதான். எனவே மதானியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 

மதானி கூறுகையில், நம்மால் என்ன செய்ய முடியும்.. பிரதமர் பகிரங்கமாக முஸ்லீம்களின் உரிமைகள் குறித்துப் பேசுகிறார்.  முஸ்லீம்களின் மத உரிமைகள் பறிக்கப்படும் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார். 

இனி அடுத்து சட்ட கமிஷன் இதுகுறித்து விவாதிக்கும், முடிவெடுக்கும்.  அது என்ன முடிவெடுக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.. நிச்சயம் எங்களது கருத்துக்களை அது கருத்தில் கொள்ளாது. எத்தனை முறை நாங்கள் கோரிக்கை வைத்தாலும் அது கேட்கப்படாது, எத்தனை முறை மனு அளித்தாலும் அது பார்க்கப்படாது. நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கப் போவதில்லை.  அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே அவர்கள் கேட்கப் போகிறார்கள். இப்போது பிரதமரே பகிரங்கமாக பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதால்,  எங்களது கருத்தெல்லாம் மதிக்கப்படவே படாது.

முஸ்லீம்களால் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்.. என்னதான் எங்களால் செய்ய முடியும்..  சாலைகளில் இறங்கிப் போராடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன். அதனால் எந்தப்  பலனும் இல்லை. கெளரவமான முறையில் உங்களது கருத்துக்களை எடுத்து வையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

எங்களால் எந்த மாதிரியான போராட்டத்தை நடத்த முடியும்.. என்ன போராட்டம் நடத்தினாலும் பலன் கிடைக்கப் போவதில்லை. எங்களிடம் இழக்க எதுவும் இல்லை. எங்களது மசூதியே போய் விட்டது.. எங்களால் என்ன செய்ய முடிந்தது.. தடுக்க முடிந்ததா இல்லையே..  எங்களிடம் இப்போது நம்பிக்கை மட்டுமே உள்ளது. கடவுளிடம் மட்டுமே நாங்கள் நம்பிக்கை வைக்க முடியும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்