கட்டுக்கட்டாக பணத்துடன்.. செல்பி எடுத்த இன்ஸ்பெக்டர் மனைவி.. உ.பியில் பரபரப்பு!

Jul 03, 2023,10:55 AM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் குழந்தைகளுடன், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை படுக்கையில் பரப்பி வைத்து செல்பி எடுத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் சஹானி, அவரது மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.



படுக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த நோட்டுக் கட்டுக்களுடன் சஹானி மனைவி, குழந்தைகள் மற்றும் சஹானி ஆகியோர் செல்பி எடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 14 லட்சம் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இது லஞ்சப் பணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சஹானி இடமாற்றம் செய்யப்பட்டார்.

சொத்து விற்ற பணம் - சஹானி விளக்கம்

ஆனால் இது சொத்து விற்று அதன் மூலம் கிடைத்த பணம். 2021ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இது எடுக்கப்பட்டது. இது லஞ்சப் பணம் அல்ல என்று சஹானி விளக்கம் அளித்துள்ளார். குடும்பச் சொத்தை விற்றுக் கிடைத்த பணத்துடன் தனது குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்