வளமான வாழ்வு தரும் வைகாசி விசாக திருநாள்

Jun 02, 2023,09:40 AM IST
சென்னை : தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். சிவ பெருமானின் வெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள், சரவண பொய்கையில் உள்ள தாமரை மலர்களால் ஆறு குழந்தைகளாக தவழ்ந்தன. அப்படி முருகப் பெருமான் அவதரித்த தினம் தான் இந்த வைகாசி விசாக திருநாள். 

வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணையும் நாளே வைகாசி விசாகமாகும். விசாகன் என்றால் மயில் மீது ஏறி பவனி வருபவன் என்று பொருள். இதனாலேயே முருகப் பெருமானுக்கு விசாகன் என்ற திருநாமமும் உண்டு. வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். 



வைகாசி விசாகத்தன்று உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி தூக்கியும் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். முருகப் பெருமான், தீப்பொறியில் இருந்து உருவானர் என்பதால் அவரை குளிர்விக்க இந்த நாளில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். பால் அபிஷேகம் செய்து முருகனை குளிரச் செய்தால், அவர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.

2023 ம் ஆண்டில் வைகாசி விசாகமானது ஜூன் 02 ம் தேதி, மங்களகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் வைகாசி விசாகம் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது செல்வத்தை பெருக்கும். பொதுவாக முருகப் பெருமானை வழிபட்டாலே சிவன் மற்றும் பார்வதியின் அருளை பெற்று விடலாம். வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ என்றும் மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.

சரவணபவ என்ற மந்திரத்திற்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், இந்த நல்ல நாளில் இந்த அற்புதமான மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்