எம்எல்ஏ திருமகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் இரங்கல்

Jan 05, 2023,09:02 AM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வும் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவருமான திருமகன் ஈவெரா நேற்று (ஜனவரி 04) மாரடைப்பால் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

திருமகன் ஈவெரா, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், தந்தை ஈவெரா பெரியாரின் கொள்ளு பேரனும் ஆவார். 46 வயதாகும் திருமகன், முதல் முறையாக எம்எல்ஏ.,வாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபைக்கு சென்றனர். இவரது மறைவிற்கு தமிழக கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கில் தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சென்று பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, திருமகன் ஈவெரா மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :




பெரியார் பரம்பரை
திருமகன் இறந்தது
பேரதிர்ச்சி

நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்

மரணம் கண்தெரியாத
காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை

கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல்

சமீபத்திய செய்திகள்

news

ஆறு பெருக்கெடுத்து ஆள வட்டம் போடுதடி!

news

Let us celebrate Erode day

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்