"ஹே எப்புர்றா"... வேற லெவலுக்கு மாறிய வண்டலூர் தமிழ்நாடு ஹோட்டல்.. !

Dec 31, 2022,08:57 PM IST
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளும் தங்களை வேற லெவலுக்குக் கொண்டு போகும் வேலையில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது போலத் தெரிகிறது. குறிப்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அத்தனை பேரையும் மலைக்க வைக்கும் வகையில் பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்துள்ளது.

தமிழக அரசு தனது துறைகளை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு துறைகளும் மறுமலர்ச்சியைக் காண ஆரம்பித்துள்ளன. குறிப்பாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தனது துறைக்குட்பட்ட பல்வேறு விஷயங்களை முற்றிலும் வித்தியாசமாக, நவீனமாக மாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக வண்டலூரில் உள்ள அதன் ஹோட்டல் தமிழ்நாடு அதிரடியாக அப்படியே தலைகீழாக மாறி  நிற்பதை உதாரணம் காட்டலாம்.  வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் ஹோட்டல் தமிழ்நாடு ரெஸ்டாரென்ட் உள்ளது. இந்த ஹோட்டலைத்தான் .. "ஹே எப்புர்றா" என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கும் வகையில் அதி நவீனமாக மாற்றி அமைத்துள்ளனர்.

பூங்காவுக்கு வரும் மக்கள் இந்த ஹோட்டலுக்கு வராமல் போக மாட்டார்கள். பூங்காவை சுற்றிப் பார்த்த களைப்பு தீர சாப்பிட்டு விட்டு செல்வது மக்களின் வாடிக்கை. ஆனால் இந்த ஹோட்டல் நீண்ட காலமாகவே கொஞ்சம் கூட மாறாமல் அதே பழைய பன்னீர் செல்வமாகவே இருந்து வந்தது. நவீன வசதிகளும் குறைவுதான். இது மக்களிடையே ஒரு குறையாகவே இருந்து வந்தது.

இதையடுத்து தற்போது இந்த ஹோட்டலை தமிழக அரசின் உத்தரவின் பேரில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதி நவீனமாக மாற்றியமைத்துள்ளது. ஏதோ ஸ்டார் ஹோட்டல் போல இதை சூப்பராக மாற்றியமைத்துள்ளனர். பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.. இங்க இருந்த தமிழ்நாடு ஹோட்டல் எங்கே என்று எல்லோரும் கேட்கும் வகையில் இந்த ஹோட்டலை வேற லெவலுக்கு மாற்றியமைத்துள்ளனர்.

ஹோட்டலின் முகப்பு படு வித்தியாசமாக இருக்கிறது. அடடே என்று ஆச்சரியத்துடன் உள்ளே போனால்.. இது வண்டலூரா இல்லை மும்பையா என்று கேட்கும் அளவுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் பின்னிப் பெடலெடுக்கிறது.  சுவர்களில் ஏகப்பட்ட  அலங்காரங்களைப் பண்ணியுள்ளனர். அழகு அழகான விளக்குகள் சீலிங்கில் தொங்குகின்றன. சாப்பிடும் மேசைகள் பளிச்சென காணப்படுகிறது. டாய்லெட்டும், கை கழுவும் இடமும் படு பளிச்சென ரிச்சாக காணப்படுகிறது. ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள ரெஸ்டாரென்ட் போல பிரமாதமாக வடிவமைத்துள்ளனர்.

உள்ளே மட்டுமல்லாமல் வெளியிலும் கூட ஆற அமர உட்கார்ந்து குடும்பத்தோடும், நண்பர்களோடும் இணைந்து ஜாலியாக இயற்கையை ரசித்தபடி சாப்பிடவும் நவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். உணவின் தரத்தையும் கூட சிறப்பாக மாற்றியுள்ளனர். போகிறப் போக்கைப் பார்த்தால்.. பூங்காவுக்குள் அடைபட்டுள்ள சிங்கமும், புலியும் கிளம்பி வந்து.. இன்னைக்கு லன்ச் என்ன பாஸ்.. என்று கவுண்டரில் கேட்டாலும் கேட்கும் போல..!

உடனே வண்டலூருக்குக் கிளம்புங்க.. சட்டுப் புட்டுன்னு பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டு.. கையோடு இந்த ஹோட்டலையும் சுற்றிப் பாருங்க.. செம ஜோராக இருக்கிறது தமிழ்நாடு ரெஸ்டாரென்ட்!

ஹோட்டல் எப்படி மாறியிருக்கிறது என்பதை இந்த வீடியோவில் பார்த்து விட்டு கிளம்பிச் செல்லுங்க!

https://twitter.com/ttdcofficial/status/1607393531710312449

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்