மறக்க முடியுமா இவரை?..  அதே க்யூட்னெஸ்.. அதே சிரிப்பு.. சிலிர்க்க வைத்த பெப்சி உமா!

Apr 04, 2023,04:45 PM IST
சென்னை : 1990 களில் தமிழக டிவி ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களாக இருந்த சன் டிவி தொகுப்பாளர்கள் நண்பர்கள் குழு, தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துள்ள போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி உள்ளது.

1990 களில் தூர்தர்ஷனை தாண்டி மக்களிடம் அதிகம் பிரபலமாக இருந்தது சன் டிவி. இதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் விஜய சாரதி, ரத்னா, பெப்சி உமா. ரசிகர்களுக்கு பிடித்த பாடல்களுடன் ஒவ்வொரு ஊராக சென்று சுற்றி காட்டியே ரசிகர்களை கவர்ந்தவர் விஜயசாரதி. தனது அடக்கமான, அமைதியாக பேச்சின் மூலம் செய்தி வாசித்தும், திரை விமரச்னங்கள் சொல்லியும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் ரத்னா. 



சினிமாவை தாண்டி மிக அதிகமான ரசிகர்கள் ஒருவர், அதுவும் டிவி தொகுப்பாளினி ஒருவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள் என்றால் அவர் பெப்சி உமா மட்டும் தான். சிரித்து சிரித்து, கொஞ்சி கொஞ்சி பேசும் இவரிடம் பேச வேண்டும் என்பதற்காகவே சன் டிவிக்கு விடாமல் போன் செய்தவர்களும், இவரது நிகழ்ச்சி எப்போது வரும் என டிவி முன் காத்து கிடந்தவர்களும் அதிகம். பல இளைஞர்களின் கனவு கன்னியாக கூட இருந்தார். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர்கள் மூவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்று சந்தித்துக் கொண்டனர். அப்போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஒன்று கூடிய போட்டோக்களை விஜய சாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். " ரத்னா வழக்கமான அடக்கத்துடன் அப்படியே இருக்கிறார். பெப்சி உமா, மறக்க முடியுமா இவர? அதே சிரிப்புடன் அப்படியே இருக்கிறார். மாறவே இல்லை. கடவுளின் ஆசி அவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் விஜய சாரதி.

இந்த மூன்று பேருமே சன் டிவியின் ஆதி கால தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவரவர் பாணியை தனி அடையாளமாக்கி சன் டிவியை வளர்த்தெடுத்தவர்கள், தாங்களும் உயர்ந்தவர்கள். விஜயசாரதி பேசும் பேச்சுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. பின்னால் நடந்தபடி பேசுவது, வித்தியாசமான செய்திகளை தொகுத்துக் கொடுப்பது.. பேட்டி காண்போரிடம் ஜாலியாக உரையாடுவது என டிசைன் டிசைனாக அனைவரையும் கவர்ந்தவர் விஜயசாரதி.

அதேபோல பெப்சி உமாவை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. அவரது பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்காக அத்தனை பேரும் தவம் கிடப்பார்கள். அவரது கொஞ்சலான பேச்சும், யாரேனும் சீண்டினாலும் கூட அதை லாவகமாக சமாளிப்பது என்று கலக்கினார் உமா. ஒரு நடிகைக்கு உரிய அத்தனை மவுசும், செல்வாக்கும், கிரேஸும் உமாவுக்கும் இருந்தது.

இன்னொரு பிரபலம் ரத்னா. இவரது தமிழ் உச்சரிப்பு அத்தனை அழகாக இருக்கும். இவரது பேச்சுக்கும், உச்சரிப்பும் அத்தனை தித்திக்கும். நிறுத்தி நிதானமாக பேசி விட்டு ஒரு புன்னைகையுடன் நிறுத்துவார் பாருங்கள்.. அடடா.. சூப்பரப்பு. இந்த மூன்று பேரும் இல்லாத சன் டிவி.. சூரியன் இல்லாத பூமி போலத்தான் தோன்றுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்