டெல்லி: 2022 ம் ஆண்டுக்கு Good bye சொல்லி அனுப்பி விட்டு, 2023 ம் ஆண்டை உற்சாகம் பொங்க, வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன் சிறப்பாக வரவேற்று உலக மக்கள் குதூகலித்து வருகின்றனர். மக்களின் முகங்களில் மட்டுமல்ல மனங்களிலும் உற்சாகமும், நம்பிக்கையும், கொண்டாட்டமும் அருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.
.jpg)
2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளும் திக்...திக்...என்ற பயம், பதற்றம், சோகத்துடன் சென்றது. கொரோனா தந்த பயத்தை போக்கி, மீண்டும் இயல்பு வாழ்க்கையை தந்தது 2022. இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, மீண்டும் வீட்டிற்குள் முடங்கும் நிலை வந்து விடுமோ என்ற பயம் அனைவருக்குள்ளும் இருக்கத் தான் செய்தது.
ஆனால் கடந்த 3 ஆண்டுகள் தந்த சிறை வாழ்க்கை, கட்டுப்பாடுகள் அத்தனையும் உடைக்கப்பட்டு, சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளாய், துள்ளும் மனதுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் 2023 ம் ஆண்டை உலக மக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2023 ம் ஆண்டு நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியான ஆண்டாக, வெற்றியான ஆண்டாகும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. இளைஞர்களின் வான வேடிக்கை கொண்டாட்டங்கள் ஒரு பக்கம், பெரியவர்களின் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் மறு பக்கம் என நிறைவான புத்தாண்டாக 2023 அமைந்துள்ளது.
2023 ம் ஆண்டினை welcome சொல்லி வரவேற்றுள்ளனர் மக்கள். முகம் தெரியாதவர்களுக்கும் Happy New Year சொல்லி, இனிப்புக்கள் வழங்கி சந்தோஷத்தை பகிர்ந்து, அதை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிறது உலகம். இந்த புத்தாண்டில் புதிதாக பிறந்த குழந்தைகளை போல் மீண்டும் வாழ்க்கையையும், விலகிப் போன உறவுகளையும் புதிதாய் தொடர்வோம்.
நியூசிலாந்தில் தொடங்கி படிப்படியாக உலகின் ஒவ்வொரு அங்கமாக மலர்ந்து வந்த புத்தாண்டு தற்போது ஒட்டுமொத்த உலக மக்களையும் புதிய நம்பிக்கை மற்றும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மலர்ந்த இந்த புத்தாண்டின் உற்சாகம் ஆண்டு முழுவதும் தொடரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் கொண்டாடித் தீர்த்துக் கொண்டுள்ளனர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}