என்னப்பா சொல்றீங்க.. ஒரு மாம்பழத்தோட விலை ரூ.19,000 ஆ?

May 10, 2023,03:26 PM IST

டோக்கியோ :  ஜப்பானின் ஹொக்காடியோ தீவில் விவசாயி ஒருவர் விளைவித்துள்ள ஒரு மாம்பழத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.19,000 மாம். இது தான் இன்றைய தேதிக்கு உலகின் மிக காஸ்ட்லியான மாம்பழமாகும்.

நககாவா என்ற விவசாயி 2011 ம் ஆண்டு முதல் ஜப்பானின் வடக்கு தீவான் பனி படர்ந்த டோகாச்சி பகுதியில் மாம்பழங்களை பயிர் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் விளையும் ஒவ்வொரு மாம்பழத்தையும் தலா 230 டாலர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். 



இந்த மாம்பழங்களில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அதற்கும் அவரே பதில் சொல்லி உள்ளார். 62 வயதாகும் இவர் முதலில் பெட்ரோலிய கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் ஆர்வமில்லாமல் வித்தியாசமாக  ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அதுவும் இயற்கை முறையில் செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதனால் தனது பண்ணையில் க்ளீன் ஹவுஸ் பண்ணை ஒன்றை அமைத்து, அதில் ரசாயன கலப்பு இல்லாமல் முற்றிலும் இயற்கையான முறையில் மாம்பழங்களை பயிர் செய்துள்ளார்.

டிசம்பர் மாதங்களில் வெளியில் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது கூட இவரது க்ரீன் ஹவுசிற்குள் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் இதனால் இவரால் அனைத்து சீசன்களிலும் மாம்பழங்களை விளைவிக்க முடிகிறது. ஒரு சீசனுக்கு சுமார் 5000 மாம்பழங்கள் வரை விளைவிக்கிறார். இவற்றை இவரே பேக் செய்து, விற்பனையும் செய்கிறார். அதனால் தான் இந்த மாம்பழங்கள் இத்தவை காஸ்ட்லி. 

இந்த மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக இவர் தனி இணையதளமே நடத்தி வருகிறாராம். அவரே எதிர்பாராத அளவிற்கு இதில் அமோக லாபம் கிடைத்து வருகிறது. இருந்தாலும் அவர் திருப்தி அடையாமல் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என இறங்கி உள்ளார். இந்த மாம்பழங்களுக்கு இவர் பூச்சி மருந்து எதுவும் அடிப்பது கிடையாதாம். முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் இவற்றிற்கு ஜப்பான் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் டிமாண்ட் அதிகமாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்