"இப்படியே போனா அப்படியே போய்ரலாம்ல"..  காரைக் கொண்டு போய் கடலில் இறக்கிய ஜிபிஎஸ்!

May 06, 2023,09:29 AM IST
ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கைலுவா கோனா பகுதியில், இரண்டு சுற்றுலாப் பயணிகள், ஜிபிஎஸ் காட்டிய வழியைப் பின்பற்றி, கடைசியில்,கடலில் போய் விழுந்துள்ளனர். அவர்களது ஜிபிஎஸ் வழிகாட்டி தவறான பாதையை காட்டி அவர்களை கடலில் போய் தள்ளிவிட்டுள்ளது.

கடலில் விழுந்த காரில் இருந்த அந்த  இரு சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூரைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் பைபர் போட்டில் போய் மீட்டு கரைக்குக்கொண்டு வந்துள்ளனர். இந்த கலகலப்பான சம்பவத்தை கிறிஸ்டி ஹட்சின்சன் என்பவர் வீடியோவாகப் பதிவு செய்து போட்டுள்ளார்.



இதுகுறித்து கிறிஸ்டி கூறுகையில், நான் மழை பெய்து கொண்டிருந்ததால் அது நிற்பதற்காக காத்திருந்தேன். அப்போது ஒரு கார் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் நேராக கடலை நோக்கிப் போனது. எனக்குக் குழப்பமாகி விட்டது. ஆனால் காரில் இருந்தவர்கள் முகத்தில் கொஞ்சம்கூட  சலனமே இல்லை. மாறாக சிரித்தபடி இருந்தனர். க டலில் போய் கார் விழுந்தும் கூட அவர்கள் அச்சமடையவில்லை. மாறாக காரை ஓட்டி வந்த பெண் சிரித்தபடி சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.

காரில் இருந்த இருவரும் சுற்றுலாப் பயணிகள், சகோதரிகளும் கூட.  அதில் ஒரு பெண்ணின் கணவர் உள்பட அவர்களுடன் வந்தவர்கள் அருகாமையில்தான் படகோட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் அவர்களும் ஓடி வந்து இருவரையும் மீட்கும் முயற்சிகளில் உதவினர்.

மன்டா ரே ஸ்னோர்கல் என்ற சுற்றுலா நிறுவனத்தின் இருப்பிடத்திற்குப் போவதற்காக அந்த இரு சகோதரிகளும் காரில் வந்துள்ளனர். அவர்களது ஜிபிஎஸ் வழிகாட்டி தவறாக வழி நடத்தி கடலில் போய் கொண்டு விட்டு விட்டது. 

ஆனால் ஜிபிஎஸ் எப்படி இப்படி தவறாக வழிகாட்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு மோசமாக வழிகாட்டிய அந்த ஜிபிஎஸ் மேப் எது என்றும் பலர் கேட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்