மதுரை: ஜூன் 22ல் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து தற்போது மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் தேதி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}