அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

Feb 20, 2026,01:16 PM IST
சென்னை : அதிமுக எம்.பி., இன்பதுரை தொடர்ந்த வழக்கில் திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் வந்துள்ள இந்த உத்தரவு திமுக.,விற்கு ஒரு பின்னடைவு என்று சொல்லுவதை விட திமுக.,விற்கு வைக்கப்பட்டுள்ள 'செக்' என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.

அதேசமயம், இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க திமுக சட்டத்துறை தயார் என்று திமுக அதிரடியா அறிவித்துள்ளது.

எதற்கு இந்த வழக்கு?

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் சுமார் ரூ.1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக தமிழக டிஜிபி.,க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனால் அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல காலமாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி., இன்பதுரை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏன் இதுவரை எஃப்ஐஆர்.,கூட பதிவு செய்யவில்லை? ஒரு புகாரை வழக்காக பதிவு செய்வதில் உங்களுக்கு சிரமம் உள்ளது என சென்னை ஐகோர்ட் பலமுறை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பியது. கோர்ட் தலையிட்டு பலமுறை கேள்வி கேட்டும், அமலாக்கத்துறை தொடர்ந்து கடிதம் எழுதியும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததால், இந்த வழக்கில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய இன்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான லஞ்ச ஒழிப்புத்துறையினர், இந்த விவகாரத்தில் ஆரம்ப கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளனர். சரி இந்த வழக்கு விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு. இதில் அதிமுக.,வும் பாஜக.,வும் எங்கிருந்தது வந்தது? இது எப்படி அழுத்தம் ஆகும்? என்ற கேள்வி கேட்க தோன்றும். அதற்கும் காரணம் உள்ளது. 



பாஜக.,விற்கு என்ன தொடர்பு?

அதாவது, பொதுவாக ஒரு புகார் போலீசுக்கு வந்தால், அந்த புகார் மீது எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் இந்த விவகாரத்தில் கடிதம் எழுதியது சாதாரண யாரோ கிடையாது. சட்ட விரோத பண பரிவர்த்தவைகள், முறைகேடுகள், அரசை ஏமாற்றும் நிதி மோசடிகள் ஆகியவற்றை கண்காணிக்கும் அமலாக்கத்துறை. அமலாக்கத்துறையே பலமுறை கடிதம் எழுதியும், நீதிபதிகள் கேள்வி எழுப்பியும் கூட இதில் எஃப்ஐஆர் போடப்படவில்லை.

காரணம், ஒரு முறைகேடு வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கில் தானாக தலையிட்டு விசாரணையை துவக்க, அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்து விடும். ஆனால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாத வரை அமலாக்கத்துறையால் எந்த ஒரு வழக்கிலும் தானாக தலையிட முடியாது.

இதுவரை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதன் அடிப்படையில் தான் அமைச்சர் கே.என்.நேரு மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வழக்குப்பதிவு செய்து விட்டால், அமலாக்கத்துறை தானாக இந்த வழக்கிற்குள் வந்து விடும். ரெய்டு, விசாரணை என அதிரடி காட்ட துவங்கி விடும். ஒருவேளை இந்த முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை, சிபிஐ.,யை வைத்து தான் எதிர்க்கட்சிகளை பாஜக மிரட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு எதிர்கட்சிகளால் முன் வைக்கப்பட்டு வருகிறது. அந்த குற்றச்சாட்டு இப்போது உண்மை ஆகி விடும்.

கே.என்.நேருவிற்கு குறி ஏன்? 

தமிழகத்தில் உள்ள 41 சட்டசபை தொகுதிகள் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 41 தொகுதிகளில் திமுக.,வின் வெற்றியை உறுதி செய்வது, தேர்தல் செலவுகளை கவனிப்பது என அந்த தொகுதிகளுக்கான முழு பொறுப்பும் கே.என்.நேருவிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கே.என்.நேருவை அமலாக்கத்துறையின் வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டால் அவரது பொறுப்பில் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் வேலைகள் முடங்கும் அல்லது தொய்வடையும். 

கே.என்.நேருவிற்கு வழக்கு விசாரணையை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். அப்படி இருக்கையில் அவர் எப்படி தேர்தல் வேலைகளை கவனிப்பார்? ஒருவேளை அவருக்கு சீட் கிடைத்தால் கூட, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை கூட ஏற்படலாம். திமுக பெரிதாக நம்பிக் கொண்டிருக்கும் தொகுதிகளில் அவர்களை முடக்க பாஜக., வைத்துள்ள மறைமுக செக் தான் இந்த வழக்கு என விபரம் தெரிந்தவர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

இதே கருத்தைத்தான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் ஆர்.எஸ்.பாரதியும் வெளிப்படுத்தினார். கே. என். நேருவை சட்டசபைத் தேர்தல் சமயத்தில் முடக்க பாஜக முயற்சிக்கிறது. அதனால்தான் இந்த வழக்கில் வேகம் காட்டுகிறார்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்ட ரீதியாக இதை நாங்கள் சந்திப்போம் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

செம டேஸ்ட்... புதிய முறையில் ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த புதினா துவையல்!

news

உடம்புல நல்ல ரத்தம் ஓடுதா... இல்லையெனில் வாங்க இந்த கோயிலுக்கு!

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

news

தோற்குமா மனிதசக்தி .. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (3)

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

கும்பாபிஷேகம்.. கோலாகலமாக தயாராகி வரும்.. ஈரோடு திண்டல் முருகன் கோவில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்