சுமதி சிவக்குமார்
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இருக்கே..!! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா...?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை ( நெகடிவ் எனர்ஜி ) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் காட்சியளிக்கும் அல்லவா...? எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம் நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம் நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம் நாடியை தூண்டிவிட உதவுகிறது.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. இதனால் தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது யோகப் பயிற்சியில் விளக்கு தீபம் தவம் பற்றி கூறியுள்ளார். திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30 க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் அல்லது அந்தி நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.
ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ். இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகி விடும்என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம். அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும் படி கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
விளக்கேற்றிய வீடு வீண் போகாது என்பது உண்மையே.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}