- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே! என்றான் கவிஞனொருவன்
ஆனால் இன்று!
நல்லவனாவதும் தீயவனாவதும் திறன் பேசி கைகளிலே !
சோறுண்ணவும் அலைபேசி
தூங்கிடவும் திறன்பேசி
பொழுதுபோக்கிட கைபேசி
அறிவை வளர்த்திட அலைபேசி என
அலைபேசி கடலில் மூழ்கியே அழிகிறதே
இச்சமுதாயம்!

ஆயிரம் கனவுகளுடன் பெற்ற பிள்ளை
அறிவுரைகளை ஏற்க மறுத்து
நம்மை அலட்சியப்படுத்திட
வாசமில்லா மலர்களாய்
வெப்பமில்லா சூரியனாய்
குளிர்ச்சியில்லா சந்திரனாய்
தென்றலில்லா காற்றாய்
மழையில்லா மேகங்களாய்
வாழ்க்கையை செயற்கையாய் வாழ்கிறதே!
தாமரை இலை நீரென வாழ்கிறதே
இயந்திரங்களோடு இயந்திரமான வாழ்க்கை
அலைபேசி எனும் அரக்கனால்
எதிர்காலச்சமுதாயமே கேள்விக்குறியானதே?
எல்லாம் அறிந்தும் ஏதும் செய்ய இயலா நிலையில் நாம்
நாம் கூறும் எதையும் ஏற்க இயலாநிலையில் இன்றைய சமுதாயம்
சுமக்கும் போதும் பெற்றெடுத்தபோதும்
பலபல கனவுகளுடன்
குழ்நதையை உருவாக்க நினைத்தோம்
எல்லாமே கானல்நீராய் மாறிட
துடுப்பில்லா படகாக
காற்றில் தடுமாறும் கொடியாக
இசையில்லா வீணையாக
இன்றைய குழந்தைகள்
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டோம்
அதை மீட்டிட வரியொன்று கூறாயோ சிவசக்தி!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}