- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
எனை படைத்தவன் இறைவன்... என்றால் ...!!!
எனக்கு உணவு படைப்பவன் நீயும்.. எனக்கு இறைவனே...!!!
உணவின்றி உயிர் வாழ முடியுமா..?
உயிர் கொடுப்பவன் நீயே அன்றோ..!!!
உணவளிக்கும் உன் உழைப்பே ...
உயர்ந்தது அன்றோ அனைத்திற்கும்..!!!
உன் நாட்டின் விடுதலைக்கு ...
உழைத்தவர் மட்டும், தியாகி அல்ல.!!!
உலக மக்களின் உணவிற்காக ...
உழைக்கும் நீயும் தியாகி தான்...!!!
உணவிற்காக ஊனினை உருக்கி...
உழைக்கும் நீ ..!!!
உயிரை மய்த்துக் கொள்கிறாய்...
உன் வறுமையால்..!!!
உன்னை சுரண்டி தின்னும்...
உன் முதலாளி மட்டும்...!!!
உல்லாச உலகில் ...
உற்சாகமாய்...வாழ்கிறான்...!!!

பணம் ஈட்டி வாழ , யாவர்க்கும் ...
பல்லாயிரம் தொழில் உண்டு...!!!
பசிக்கின்ற வயிற்றுக்கு உணவளிக்க... பவித்திரமான உன் தொழில் மட்டுமே.!!!
நீயோ...!!! உழைத்து.. உழைத்து...
நீர்த்து கருத்து கிடக்கிறாய்...!!!
நின் உழைப்பினை உறிஞ்சுவோன்...
நின்று ,தின்று, பருத்து, கிடக்கிறான்...!!!
மண்ணிலே போட்ட விதை...
மறுபிறப்பு எடுப்பது போல...!!!
உலகு உய்ய... உன் மறுபிறப்பு...
உலகிற்கு காலத்தின் கட்டாயம்..!!!
உன் வாழ்வில் ஒளி வீசட்டும்..!!
உன் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!
உன் வாழ்வு என்றும் வளமாகட்டும்..!!
உன்னை இவ்வுலகம் போற்றட்டும்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}