யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??

Sep 29, 2025,05:03 PM IST
- தமிழ்மாமணி இரா. கலைச் செல்வி 

துயரக்களமாகி போன கருர்..!!
துடிதுடித்த நாற்பது உயிர்களை... 
காவு கொடுத்த களம்..!!

எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை ,
எம்  மக்களுக்கு திரை மோகம்,
என்றும் குறைந்தபாடில்லை.

சினிமாவில்  ஆயிரம் முறை பார்த்த அந்த 
சிங்கார முகத்தை நேரிலும்  பார்க்க வேண்டுமா?

பார்க்கலாம். பார்க்க ஆர்வம் இருக்கலாம்.
பரிதவித்து  இப்படி பார்க்க என்ன அவசியம்..?

அவ்வளவு கூட்ட நெரிசலில் குழந்தைகளையும்,
அழைத்துச் சென்றா பார்க்க வேண்டும்.?

இவ்வளவு கூட்டத்தில்  அவரின்  அருகில்
இன்று  போய் கைகுலுக்கவா சென்றீர்கள்...?  

சிறிது நேரம்  நேரில் பார்க்க, பல மணி நேரம்,
சிரமப்பட்டு  காத்திருந்த  இளசுகள் கூட்டம்.



யாரைக் குறை கூறுவது...??
யார் மீது குற்றம் சாட்டுவது..??
மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??

அரசியல் தலைவர் மீது  கொண்ட  நம்பிக்கையா..?
சினிமா நடிகர் மீது கொண்ட மோகமா.?

கால் கடுத்துக் காத்து நின்ற கூட்டம்
காவு  வாங்கியது பல அப்பாவிகளின் உயிரை.

எல்லா  அரசியல் கூட்டங்களும் அப்படித்தானே‌.
ஏன் பாமர மக்கள் பரிதவித்து  செல்ல வேண்டும்..?

சோறு ,தண்ணி இன்றி காத்திருந்து  பார்ப்பதில் ,
சோர்ந்த மனம் குதூகலத்தில் கொப்பளிக்கிறதா?

முதல் நாள் முதல் ஷோ பார்க்கத் தவிக்கும் ஆர்வம்.
ஐந்தாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கும் ஆர்வம்.

அத்தி வரதரை பார்க்க... கூடிய கூட்டம்..!!
கும்பமேளாவிற்கு .... கூடிய கூட்டம் ..!!
கோயில் பூஜை நிகழ்வில்.... கூடுகின்ற கூட்டம்..!!
சபரிமலையில் ஏற்பட்ட ... நெரிசல் கூட்டம்..!!

சிறிதும் பெரிதுமாய் எத்தனை சம்பவங்கள் நடந்தன.??
இவற்றை மறக்க முடியுமா? மறுக்க முடியுமா..??

கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அவரவர் உயிரை..
காப்பாற்றிக்கொள்ள தானே தோன்றும்.
காலடியில் யார் இருந்தால் என்ன..!!

ஐயகோ..!!!.அந்தக் குழந்தை அந்த நேரத்தில்...
எப்படி துடிதுடித்திருக்கும்..!!

இந்த மூடர்களை என்ன செய்வது.?
இச்சம்பவமே கடைசி சம்பவமாக இருக்குமா?

இந்த மக்கள் மாறாத வரை,
இது போன்ற சம்பவங்கள் ...
இனியும்  நிகழத்தான் செய்யும்...!!!

இது போன்ற கூட்ட நெரிசல்களை,
இந்த அப்பாவி மக்கள்  தவிர்த்தால் மட்டுமே ,
இது போன்ற நிகழ்வுகள் ...
இனியும் நடக்காது எனக் கூறலாம்.


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

news

கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு

news

கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி

news

கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

news

டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?

news

கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?

news

கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

news

யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??

அதிகம் பார்க்கும் செய்திகள்