- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வாடி நின்ற மக்களுக்கு...
தேடி வந்து உயிர் கொடுத்து....
தடம் பதித்து தளிர் துளிர்க்க .....
இனம் செழிக்க...
இறைவன் அளித்த அதிர்ஷ்டம் .....
பட்டங்கள் பெற்ற பின்பும் .....
பரிதவிக்கும் இளைஞனுக்கு.....
சட்டங்கள் எதுவும் இன்றி ....
உயர்பதவி கிடைத்துவிட்டால்.....
அள்ளித் தரும் ஆனந்தம்.....

இன்பங்கள் கூடிவரும் அதிர்ஷ்டம் ......
பேரிடர் காலங்களில்.....
முகம் மறைக்கும் நீரினிலே....
கரம் கொடுக்க யாருமின்றி.....
தவிக்கின்ற நொடியினிலே.....
சிறைபிடிக்க வந்தது போல் ....
மரம் பற்ற கிடைத்து விட்டால்.....
மனம் மகிழும் நிலை அதுவே அதிர்ஷ்டம்.....!
தவறி நாமும் தவறு செய்தால் ......
தயக்கமின்றி தடுத்திடவே......
உண்மையான நட்பு மட்டும் .....
உரிமையுடன் கிடைத்துவிட்டால்.....
அதுவும் கூட அதிர்ஷ்டம்.....!
காத்திருக்கும் கன்னியவள்......
கரம் பிடித்து வந்த துணை....
கலங்கிடாமல் காலம் வரை ....
காத்து நின்றாள்.....
கடவுள் தந்த வாழ்க்கை அது அதிர்ஷ்டம் ..
அழுத நின்ற பிள்ளைக்கு அமுதாக பால் கொடுத்த....
அன்னை தந்தை காட்சி தரும் அவனியிலே.....
வாழ்வதுவும் பேரதிர்ஷ்டம் ......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
ரீல்ஸ் நமக்கு தேவையா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
பிரியாவிடை!
திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
{{comments.comment}}