-மலர்விழி ராஜா
தாத்தா எனும் சொல்லாலே.......
அனைத்தும் கேட்காமல்
தந்தார் தன் செயலாலே.....
தாத்தாவின் கதை கேட்டால்
எல்லாமே கவிதைகளாகும்
அன்பை கொடுத்து நற்பண்பை வளர்த்தார்.....
இன் முகம் காட்டி இதமாக......
பழங்கள் வாங்கி மடியில் கட்டி.....

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி......
இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால்....
செல்லமாக திட்டி......
அன்புடன் அணைத்து
அறிவினை புகட்டி......
ஆனந்தமாக சேட்டைகள் அனைத்தையும்.....
ரசித்திருந்தாரே......
வாழும் முறையை தன்
செயலில் காட்டி.....
வாழ்க்கையை ருசிக்க வைத்தார்
ரசிப்புடன் பார்க்க வைத்தார்
வரம்புகள் இல்லா வழக்கை தீர்த்து......
அன்பே சிவமென
நம்பிக்கையூட்டி.....
அறநெறியுடனே வாழ செய்தவரே.......
நெற்றியில் திருநீறிடும் அழகு.....
நேர்த்தியான வெண்ணிற உடையில் ...
முறுக்கு மீசை பாரதியைப்போல்......
வீர நடையில் சிவாஜியை நினைவூட்டி.....
உள்ளத்தில் குழந்தையாக......
புன்னகை தவழ....
இரக்கத்தின் இயக்கமாக வாழ்ந்த மாமனிதர்.....
ஆம்.....!!
கருணையே வடிவான கடவுள்.....
கடவுளுக்கேப் பிடித்த ஒரு மனிதர்
தாத்தா...... !!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}