பைரவும் அபியும்!

Jan 12, 2026,03:59 PM IST

- மதலைமேரி


பள்ளி வேனில் இருந்து அபி வேகமாக ஓடி வந்தான். பைரவ் இருந்த இடத்தில் சுத்தமாக இருந்தது. பந்து விளையாட போயிருப்பானோ? மாடிக்கு ஓடினான் அபி ,அங்கும் பைரவை காணவில்லை. வீட்டினுள் இருப்பானோ? அங்கும் காணவில்லை.  இருக்காதே அம்மா அவனை உள்ளே விட மாட்டாரே காணுமே அம்மாவிடம் ஓடினான். எங்கே சென்றாய் உடை மாற்றி பால்குடி என்றாள். காதில் எதுவும் விழவில்லை. அழ ஆரம்பித்தான்.


பைரவை யாரோ தூக்கிக் கொண்டு சென்று போய் இருப்பார்களோ? இருக்காது தாத்தா அவனை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கலாம். அம்மா கட்டாயப்படுத்தி உடைமாற்றி விட்டார். சாப்பிட கொடுத்தார்  சரியாக சாப்பிடவில்லை. முடிவாக அம்மாவிடம் கேட்டான்.  பைரவ் எங்கே அம்மா, பைரவை யாரோ தூக்கி சென்று விட்டார்கள் என்றாள். 


அவ்வளவுதான் அபி அழ தொடங்கினான். அழுது அழுது முகம் வீங்கியது. அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை. காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்று அம்மா நினைத்தாள். அடுத்த நாள் பள்ளியில் இருந்து ஆசிரியர் போன் செய்தார் அபி தன் நாயை தொலைத்து விட்டதால் தேர்வில் ஒன்றும் எழுதவில்லை  என்று கூறினார் ஆசிரியர். அம்மாவின் கனவு உடைந்தது. பள்ளியிலிருந்து வந்து மறுபடியும் அழுதான். 




தாத்தாவையும் பாட்டியையும் காணவில்லை. பைரவையும் காணவில்லை எங்கே சென்றார்கள். அபி படிக்க வேண்டும் என்று தான் அபி அம்மா தன் தோழிக்கு பைரவை கொடுத்து விட்டாள். வேறு வழியின்றி  போன் செய்து பைரவை கொண்டு வந்து விட சொன்னாள். பைரவ் வந்ததும் அபி மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்துக் கொண்டான். அபியிடமும் பைரவ்விடமும் கண்டிப்பாக கூறினாள். படிக்கும்போது பைரவுடன் விளையாடக் கூடாது என்று அபி நன்றாக படித்தான். 


பைரவ் நாய்க்குட்டி என்றாலும் ஏதோ புரிந்தது போன்று அபி படிக்கும் வரை எதுவும் தொந்தரவு செய்யவில்லை. அம்மாவுக்கு ஆச்சரியம் நாய்க்குட்டிக்கே அன்பானவர்கள் படிக்கும் போது தொந்தரவு செய்யக்கூடாது என்று புரியும் போது எனது மாமனார் மாமியார் அபிக்கு செல்லம் கொடுத்து படிக்க விடமாட்டார்கள் என்று கணவரிடம் சண்டை போட்டு தன் நாத்தனார் வீட்டுக்கு அனுப்பியது  எவ்வளவு தவறு என்று மனது உறுத்தியது.


என்னங்க, என்னங்க, கணவரை அவசரமாக அழைத்தாள் அபியின் அம்மா, அத்தையையும் மாமாவையும்  அழைத்து வந்து விடுங்கள். அபி நன்றாக படிப்பான் என்றாள் .உடனே தந்தையை அழைக்க கிளம்பி விட்டான் அபியின் அப்பா, அபிக்கு ஒரே சந்தோஷம்  முதல் வகுப்பிலேயே முதல் மதிப்பெண்  பெற்றுவிட்ட மகிழ்ச்சி அபி அம்மாவுக்கு.


நாய்க்குட்டிக்கே சொந்தங்களே பிரிவது கஷ்டமாக இருக்கும்போது, வயதானவர்களை ஏதோ காரணம்  கூறி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது எத்தனை 'பாவம்' என்று உணர்ந்தாள் அபி அம்மா. தன் மாமனார் மாமியாருடன் மகிழ்ச்சியாக இருந்தாள். நாமும் அது போல் மாற முயற்சி செய்வோம். வயதானவர்களை ஒதுக்க வேண்டாம். நமக்கும் வயதாகும் என்பதை உணர்வோம்.


(மை. மதலை மேரி ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், கோவை- 31)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்

news

வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!

news

தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை

news

புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்

news

பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

news

2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்