கலை தந்த அறம்.. கலைஞர்.. காலம் போற்றும் கவின் மிகு சொல்லோவியம்!

Jun 03, 2025,03:43 PM IST
- முனைவர் மு. ஜோதிலட்சுமி

கலை தந்த அறம்
கலைஞர்
காலம் போற்றும்
கவின் மிகு சொல்லோவியம்
அரசு இயல் படைத்த
வள்ளுவர் வழி ....
அரசியல் நடாத்திய
செங்கோல் 
மேதினியில் ஏது இனி என மற்றவர் வியக்கும் மதிநுட்பம் ....
மாண்பமை மேனாள் முதல்வராய்
மக்கள் நலன் சார்ந்து
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத்தரம்
உயர வகுத்திட்ட
திட்டங்கள்
வருகின்ற அரசியல் தலைமுறைகளும்
கற்க வேண்டிய
உயர்வியூகங்கள்




பகுத்தறிவு
பகலவனின் கொள்கைகளுக்கு ஒளிக்கதிராய் அறியாமை இருள் அகற்றிய அறிவொளியாய்
இந்தி திணிப்பில்
தமிழ் மொழி காக்கும்
போர் வாளாய்
பாமர மக்களின் ஏற்றமாய்
பகுத்தறிவாளர்களின் தோழமையாய்
தமிழக வரலாற்றில்
தனித்துவமிகு தலைவராய் விளங்கிய பெருந்தகை இவர்
தமிழன்னையின்
செல்வ மகனாய் 
செம்மொழி அங்கீகாரம்
பெற்று தந்த 
முத்தமிழ் அறிஞர்
தொல்காப்பிய பழமைக்கு புதுமையும்
சங்கத் தமிழுக்கு எழில் மிகு உரையும்
சிலப்பதிகார புரட்சியும் என இலக்கியத் தமிழ்
பறைசாற்றும்
இவர் தமிழ் இன உணர்வின் மேன்மைகள் 
திராவிட
இயக்கமும் 
எழுத்தும் இவரின்
இரு கண்கள்
இரண்டிற்கும்
இமை சோராமல்
இறுதி வரை
உழைத்த 
மாநிலம் போற்றும்
மகத்துவம்
காலம் எனும் வரலாற்றில்
அரசியல் சாசனத்தில்
தமிழகம்
தவிர்க்க முடியாத
மறக்க முடியாத
தனி ஆளுமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்
 

முனைவர் மு. ஜோதிலட்சுமி
இணைப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப்ஹீபர் கல்லூரி
திருச்சி - 17
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்