-அ.தாமஸ்
உயரிய நல் உணர்வோடு நேசித்த உறவுகள் அறியாத நேரத்தில் தொலைந்திடும் வேளையில், தவித்திடும் மனது, தொலைந்த உறவு மீண்டும் கிடைக்கையில் மகிழ்ந்திடும் நிலைக்கு இணை ஏதும் இல்லை இவ்வவனியில்.
தொலைந்த ஒன்று கிடைக்கையில் பெற்றிடும் பேரின்பத்திற்கு, தேடாத ஒன்று கிடைக்கையில் பெரும் இன்பம் என்றுமே இணையாகாது.

தேடாமல் கிடைத்திடும் எந்த ஒன்றும் அந்நேர மகிழ்ச்சியே அன்றி, நிரந்தர மகிழ்ச்சியே அல்ல. இந்நிலை உணராமலேயே, தொலைத்ததைத் தேடாமல் கிடைப்பதில் இன்பம் பெறுவதில் மகிழ்கிறோம்.
புதிதாய்க் கிடைத்த ஒன்றில் திளைத்து விட்டு, தொலைத்த ஒன்றைத் தேடும் நிலை நாம் தவிர்த்தால், கிடைத்த ஒன்றும் தொலைந்த ஒன்றாய் விரைவில் தொலையும் நிலையே நம்மில் மிஞ்சும். எனவே, தேடலில் இன்பம் நாடி, தேடியதில் மகிழ்வோம் நாளும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
கண்கள் மூடும் தூக்கத்தின் கனவில் கண்டேன் சிரிக்கிறாய்!
காஞ்சியின் பேரொளியே!
என் அன்பு அப்பாவிற்கு...!
சிறுகதை: செல்லம் என் குழந்தை
சிந்தனைச் சிதறல்.. உறவுகள் அறியாத நேரத்தில் தொலைந்திடும் வேளையில்!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை
Short story: யசோதா
ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது
தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை
{{comments.comment}}