சிந்தனைச் சிதறல்.. எல்லா நேரங்களிலும் இருந்தும், அறியவும், அனுபவிக்கவும் மறுக்கும் அதிசயச்சொல்!

Oct 05, 2026,05:06 PM IST

- அ. தாமஸ்


மகிழ்ச்சி, இது ஒரு மந்திரச் சொல். எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் இருந்தும், நாம் அறியவும்,  அனுபவிக்கவும் மறுக்கும் அதிசயச்சொல். 


வெளியில் சிரிப்பதல்ல மகிழ்ச்சி, விழிகள் அழுதாலும் உள்ளம் சிரிக்கும் உயர்வே மகிழ்ச்சி. உள்ளம் சிரிக்கையில் கிடைத்திடும் உயர் நல் நிறைவே மகிழ்ச்சி.


பிறர் சிரிக்க சிரிப்பதல்ல மகிழ்ச்சி; பிறர் சிரிப்பில் நாம் சிரிப்பதும், பிற சிரித்திட நாம் சிரிப்பதுமே மகிழ்ச்சி. 




கவலை இல்லா  மனமே இல்லை. கவலை நிறைந்த மனதையும் கலங்கச் செய்யாமல் காத்து, எந்த ஒன்றையும் கடக்கும் வழிவகை கொடுக்கும் அதிசயமே மகிழ்ச்சி. 


மகிழ்ச்சி என்பது கிடைத்தற்கரிய அதிசயம் அல்ல, உள்ளம் நிறைந்து உதட்டில் கசிவது தான் மகிழ்ச்சி. மகிழ்ச்சி ஒன்றும் காசுக்குக் கிடைக்கும் கடைச் சரக்கல்ல; மனம் வைத்தால் மகிழ்ந்தே இருக்கலாம் என் நிலை வந்தாலும், அந்நிலை எவ்விளைவைத் தந்தாலும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்