32 வயது.. கல்யாணமாகி 3 வருடமே ஆகிறது.. சுருண்டு விழுந்த இளைஞர்.. கிரிக்கெட் மைதானத்தில் ஷாக்!

Sep 18, 2024,10:48 AM IST

விழுப்புரம்:   திண்டிவனம் வட கொளப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் பாலாஜி. இவருக்கு வயது 32. இவருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் தான் ஆகின்றன. இவர் கொளப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நொளம்பூர் அணிக்கும் கீழ்சேவூர் அணிக்கும் நட்பு ரீதியாக நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடினார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நொளம்பூர் அணி சார்பில் பந்து வீச சென்ற பாலாஜி திடீர் என மயங்கி கீழே விழுந்தார்.




அப்போது உடன் விளையாடியவர்கள் சாதாரண மயக்கம் தான் என்று எண்ணி முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். தண்ணீர் தெளித்தும் பாலாஜி எழுந்திருக்கவில்லை. இதனால், அச்சமடைந்த நண்பர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்தினால் அவர் இறந்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்