தலைமை பதவியையும் நன்மைகளையும் தரும் ஆடிக் கிருத்திகை

Aug 09, 2023,10:27 AM IST

சென்னை : அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் ஆடிக்கிருத்திகை தினமாகும். முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானது கார்த்திகை விரதம். 


முருகப் பெருமான், சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தது விசாக நட்சத்திர தினத்தில் என்றாலும், முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்குரியது ஆனது. முருகனை தாயாக இருந்து வளர்ந்ததால் அன்னை பார்வதிக்கு இணையான பெருமையை பெற்றவர்கள் கார்த்திகை பெண்கள்.




சிவ பெருமானிடம், நட்சத்திரமாக இருக்கக் கடவது என வரம் பெற்ற கார்த்திகை பெண்களை, அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். கார்த்திகா நட்சத்திரம் ஒவ்வொரு  மாதமும் வருகிறது என்றாலும், தை, கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். இந்த நாட்களில் முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 09 ம் தேதி கொண்டாடப்படுகிறது.


ஆடிக்கிருத்திகை அன்று செவ்வரளி மாலை சூட்டி, ஷட்கோண கோலம் அமைத்து, சரவணபவ என எழுதி அதில் 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஓம் சரவண பவ மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல விதமான செல்வங்களும் கிடைக்கும். வாழ்வில் ஏற்பட்டுள்ள திருமண தடை, குழந்தை பாக்கிய தடை, வீடு அல்லது மனை சார்ந்த பிரச்சனைகள், செவ்வாய் தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். முருகப் பெருமான், செவ்வாய் கிரகத்திற்குரிய தெய்வம் என்பதால் முருகனை வழிபடுவதால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.


அதோடு கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய முக்கியமான சிறப்பு தலைமை பதவி தரக் கூடியதாகும். பதவி உயர்விற்காக காத்திருப்பவர்கள், பதவி உயர்வு பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருந்து வழிபடலாம். முடியாதவர்கள் உப்பில்லாத உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது ஆகும். 


ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்க மாத என்பதால் தொடர்ந்து கிருத்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதம் கிருத்திகையில் துவங்கி, தை மாதம் கிருத்திகை வரை தொடர்ந்து 6 மாதங்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். இதனால் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்