டெல்லி: டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆம் ஆத்மி இழந்துள்ள நிலையில் அதுகுறித்து பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பாணியில் கலகலப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.
இன்று காலை முதல் தற்போது வரையில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக பெரும்பான்மைக்கு அதிகமாக 47 இடங்களை பெற்று வெற்றி பெறும் நிலைக்குப் போய் விட்டது. ஆம் ஆத்மி 23 இடங்களை கைப்பற்றி கடும் தோல்வியை தழுவியது. இதனால் ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கெஜ்ரிவாலே தோற்றுப் போய் விட்டதால் அக்கட்சி சோகமாகியுள்ளது.
டெல்லியில் 70 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தல் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில், மொத்தம் 60.5% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்காக 19 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை 8 மணிக்கு முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆம் ஆத்மியை பின்னுக்கு தள்ளி பாஜக தொடர்ந்து முன்னிலை வைத்து வந்தது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு ஆம் ஆத்மியின் தலைவரான கெஜ்ரிவால் முன்னிலை வகித்தார். சற்று நேரத்தில்
பாஜகவின் பர்வேஷ் குமார் முன்னிலை பெற்று கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து அங்கு இழுபறி நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து பிற்பகலுக்குப் பிறகு பாஜக அதிக இடங்களில் பெரும்பான்மை பெற்று முன்னிலை வகிக்கிறது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார்.
2013, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று வந்த நிலையில், கெஜ்ரிவால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியதற்கு காரணம் மதுபான கொள்கை வழக்கில் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களே என்று பொதுவான கருத்து எழுந்துள்ளது.
இதற்கிடையே டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வெற்றியை ரைமிங்காக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவின் 'தலை'நகரில் பாரதிய ஜனதா கட்சி 'தலை' நிமிர்கிறது.... ஆம் ஆத்மி..... 'தலை'குனிகிறது
காங்கிரஸ்.... 'நிலை ' குலைகிறது... என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் டெல்லியைப் போலவே தமிழ்நாட்டிலும் இந்தியா கூட்டணி கலகலத்துப் போகும் என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}