- ஸ்வர்ணலட்சுமி
விசுவா வசு வருடம் 20 25 ஜூன் மாதம் 25ஆம் தேதி ஆனி மாதம் 11ஆம் நாள் அமாவாசை திதி இன்று மாலை 5 மணி வரை இருக்கிறது பிறகு பிரதமை திதி.
ஒவ்வொரு வருடமும் வரும் ஆடி அமாவாசை, மகா ளய அமாவாசை , தை அமாவாசை போன்றே ஆனி மாதத்தில் வரும் ஆசாட அமாவாசையும் மிகவும் முக்கியமானதும் சிறப்பானதும் ஆக கருதப்படுகிறது.
வழிபாடு: முன்னோர் வழிபாடு செய்யவும், பித்ரு தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட அமாவாசை ஆன இன்று வழிபாடு செய்ய சிறந்த நாளாகும். சிலர் வீடுகளில் பித்ரு தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்வார்கள். பருப்பு சாதம் , பூசணிக்காய் வாழைக்காய் அகத்திக்கீரை, வடை பாயசம் போன்றவற்றை உணவில் சமைத்து படையல் இட்டு வழிபடுவர். சிலர் புனித நதிகளில் நீராடுவார்கள்.
இது மூதாதையர்களுக்கு குறிப்பாக இறந்த பெற்றோருக்கு, முக்கியமாக மாமனார் இல்லாத பெண்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு படையல் இட்டு வழிபட புனிதமான நாள்.

அமாவாசை என்பது "நிலவு இல்லாத நாள் "அதாவது "அ "என்றால் இருக்கவில்லை ,"மா" என்பது சமஸ்கிருதத்தில் சந்திரனை குறிக்கின்ற மற்றொரு வார்த்தையாகும்." வாசை" என்பது வாழுதல் என்பதற்கு அர்த்தமாகும். இவை அனைத்தும் சேர்ந்து "நிலவு இல்லாத நாள்" அல்லது வானத்தில் சந்திரன் வசிக்காத நாள் என்று பொருள்படுகிறது.
இந்த நாள் தான தர்மங்கள் செய்ய உகந்த நாளாகும். சிலர் பிராமணர்களுக்கு உணவு அளிப்பதும், ஜீவராசிகளான பசு, நாய், காகம் ,எறும்பு போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிப்பதும் சிறப்பானதாகும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியமான செயலாகும்.
அமாவாசை அணை இன்று சந்திரனின் சக்தி குறைவாக இருக்கும் மேலும் வீடுகளில் பூஜை செய்து காயத்ரி மந்திரம் ஜெபிப்பது ,சிவன் வழிபாடு செய்யவும், முருகன் வழிபாடு செய்யவும் உகந்த நாள்.
மனதில் நல்லவை அல்லாத விஷயங்களை தவிர்த்து நல்ல எண்ணங்களை வைத்து இறைவனை பிரார்த்தனை செய்து ,அமாவாசை ஆன இன்று நல்ல செயல்கள் செய்ய நமக்கு நன்மை தரும் நாளாகும். இவ்வாறு ஒவ்வொரு விரதமும் ,வழிபாடுகளும், கடைபிடிப்பது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வாழ்க்கையில் மென்மேலும் உயரவும் கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் வளரும் என்பது நிச்சயம்.
ஆனி அமாவாசையான இன்று இறைவழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்து அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}