மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில், பைக் மீது கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் கனகவேல். கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கனகவேல் மகன் காரை ஓட்டி வந்துள்ளார். கார் சிவரக்கோட்டை அருகே வந்த போது கொய்யாபழ வியாபாரி பாண்டி இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கொய்யாபழ வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக , காரை ஓட்டி வந்த மணி திடீர் என்று பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, கார் மணியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது. அத்துடன் நில்லாமல் கார் தடுப்புகளை தாண்டி தலைக்குப்பற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவஸ்ரீ ஆகிய 5 பேர் மற்றும் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய படுகாயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஓட்டி வந்த மணி என்பவர் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடம் மக்கள் சாலையைக் குறுக்கே கடக்கும் வகையில் உள்ளது. அந்த இடமே விபத்துக்களை வரவேற்கும் பகுதி போல இருக்கிறது. உடனடியாக இந்த இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று மக்கல் கருத்து தெரிவிக்கின்றனர்.
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}