ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் அல்லு அர்ஜூன் இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இந்த படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. சந்தன மரக்கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தின் மையக்கரு அமைந்துள்ள நிலையில், முதல் நாள் மட்டும் ரூ.265 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையங்கில் புஷ்பா2 படத்தின் முதல் காட்சியை பார்க்க குடும்பத்துடன் சென்ற ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூனும் வந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது. ரேவதி என்பவர் உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் தான் கூட்டம் ஏற்பட்டதாக கூறி போலீசார் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் இச்சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த செய்தி படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ரேவதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம். ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த அதிர்ச்சி செய்தியால் எங்களால் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியவில்லை.
பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்திற்கு தன்னுடைய சார்பில் ரூ.25 லட்சம் நிவராணமாக வழங்கப்படும். மேலும் படக்குழுவினர் எந்த உதவி வேண்டுமாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரேவதியின் மகனின் மருத்துவ செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?
PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!
மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
இறக்குமதி வரியால் பாதிப்படைந்தவர்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்த வேண்டும் : எம்.பி.சு வெங்கடேசன்
uncle என விஜய் சொன்னது...டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில்
புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை
2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்
{{comments.comment}}