தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல்.. யாருக்கெல்லாம் மீண்டும் சீட்?

Feb 18, 2026,07:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகின்றன.


2026 ஏப்ரல் 2-ஆம் தேதியுடன்  திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என். சோமு  ஆகியோர் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எம். தம்பிதுரை, அதிமுக ஆதரவுடன் எம்.பி. ஆன தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது.


இதையடுத்து இந்த ஆறு இடங்களுக்கும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 5 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 6ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மார்ச் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். தேர்தலில் போட்டி இருந்தால், மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.




சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து புதிய எம்.பிக்களை தேர்வு செய்வார்கள்.  சட்டசபையில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், காலியாகும் 6 இடங்களில் பெரும்பாலான இடங்களை, அதாவது தற்போது உள்ள 4 இடங்களையும் திமுகவே கைப்பற்றும்.


அதிமுக சார்பில் யார் மீண்டும் தேர்வாகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தம்பிதுரைக்கு மீண்டும் சீட் கிடைக்குமா அல்லது வேறு யாருக்கேனும் சீட் தரப்படுமா என்று தெரியவில்லை. அதேபோல ஜி. கே.வாசனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா அல்லது வேறு யாருக்கேனும் தரப்படுமா என்றும் தெரியவில்லை.


மாநிலங்களவைத் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே தமிழக சட்டசபைத் தேர்தலும் (ஏப்ரல்/மே 2026) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


ராஜ்யசபா தேர்தலை வைத்து திமுக, அதிமுக கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. காரணம் தேமுதிக மற்றும் பாமக ஆகியவை தலா ஒரு ராஜ்யசபா சீட்டைக் கேட்டு வருகின்றன. அதில் அன்புமணி தற்போது அதிமுக கூட்டணியில்தான் உள்ளார். அவருக்கு சீட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்து ஒரு சீட்டைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்