Allu Arjun release.. நல்லாருக்கேன்.. சட்டத்தை மதிப்பேன்.. விசாரணைக்கு ஒத்துழைப்பேன்.. அல்லு அர்ஜுன்

Dec 14, 2024,12:10 PM IST

ஹைதராபாத்: சிறையிலிருந்து வெளிவந்த நடிகர் அல்லு அர்ஜுன், நான் சட்டத்தை மதிப்பவன். யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.


நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி நாடு முழுவதும் வெளியானது. இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூலை  வாரிக் குவித்து சாதனை படைத்தது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் படம் வெளியானாலும் முன்னதாக டிசம்பர் நான்காம் தேதி பெங்களூரில் சத்யா திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. அப்போது படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.




நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் வந்த சத்யா திரையரங்கில் ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். அல்லு அர்ஜுன் காண ரசிகர்கள் முண்டி எடுத்துக்கொண்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் மயக்கமுற்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர் மனைவி இரண்டு குழந்தைகள் என படம் பார்க்க வந்தவர்களில் ரேவதி என்ற 35 வயது பெண் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தார். அதே சமயத்தில் படுகாயம் அடைந்த அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


புஷ்பா2 படத்தை பார்க்க கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு செய்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன்  அடிப்படையில் நடிகர் அல்லு அர்ஜுன், சந்தியா திரையரங்க

உரிமையாளர், மேலாளர் மற்றும் பாதுகாவலர் மீது வழக்கு போடப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன் வருகை குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்றும், அவரின் பாதுகாவலர் ரசிகர்களை தள்ளியதாகவும் போலீசார் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அதேபோல் அல்லு அர்ஜுனை காண ஏராளமான மக்கள் வருகை தருவது குறித்து தியேட்டர் நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இதனையடுத்து நேற்று ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் வீட்டுக்கு சென்று போலீசார் அவரைக் கைது  செய்தனர். இது அவரது  ரசிகர்கள் மற்றும் திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணிற்கு  இழப்பீடாக 25 லட்சம் வழங்கியுள்ளதாகவும், இதனால் தன்மீது போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று மாலை விசாரித்த கோர்ட், அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது.


இதற்கிடையே நடந்த விஷயம் துரதிஷ்டமானது தான். ஆனால் இந்த சம்பவத்திற்கு ஒருவர் மீது மட்டுமே குற்றம் சுமப்பது வேதனை அளிக்கிறது என நடிகர் நானி, ரஷ்மிகா மந்தனா, ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பாலிவுட் நடிகர் வருண் தவான், என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவளித்தனர். 


இந்த நிலையில் ஒரு நாள் முழுவதும் சிறையிலிருந்த அல்லு அர்ஜூன் இன்று அதிகாலை ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் சட்டத்தை மதித்து நடப்பவன். சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்பேன். கடந்த 20 வருடங்களாக திரையரங்கத்திற்குவந்து நான் படம் பார்த்து வருகிறேன். அது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் இந்த முறை எதிர்பாகாத விதமாக சம்பவம் நடந்து விட்டது. இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

news

ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?

news

தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி

news

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

news

ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்

news

ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!

news

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

அதிகம் பார்க்கும் செய்திகள்