சென்னை: இந்தியன்2 படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விவேக் நடித்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த வேடத்தில் ஒரிஜினலாக நடித்தவர் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமல்ல.. விவேக்குடன் இணைந்து மைனர் குஞ்சு என்ற காமெடி வேடத்தில் கலக்கியவரான நடிகர் பாபுதான். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடிக்க உருவாகி வெளியாகியுள்ள படம் இந்தியன். 2 முதல் பாகம் போல விறுவிறுப்பாக இல்லை என்று பல் வேறு விதமான நெகட்டிவ் விமர்சனங்களை முதல் நாளே சிலர் திட்டமிட்டு பரப்பிய போதிலும் கூட மக்கள் தியேட்டர்களுக்குப் படையெடுத்து ரசித்து வருகின்றனர்.

படம் குறித்துத் திரையுலக பிரபலங்களும் வெகுவாக பாராட்டி கமெண்ட் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். திரை ரசிகர்களும் கூட படம் நல்லாத்தானே இருக்கு.. எதுக்காக இப்படி நெகட்டிவாக பரப்புகிறார்கள் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
அதில் ஒன்று இப்படத்தில் தோன்றிய நடிகர் விவேக். இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர்தான் விவேக் மரணமடைந்தார். இதனால் அவரது ரோல் படத்தில் இருக்காது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் மூலம் விவேக் உருவத்துக்கு உயிர் கொடுத்து படத்தில் கொண்டு வந்து விட்டார் ஷங்கர். அதேபோல மனோபாலாவும் இதில் இருக்கிறார்.
இதில் விவேக் வேடம் தத்ரூபமாக பொருந்திப் போயிருக்கிறது. பலரும் விவேக்கை மீண்டும் திரையில் பார்த்ததால் பெரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். இந்த நிலையில் விவேக் வேடத்தில் நடித்தவர் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. பல்வேறு சீரியல்கள், மற்றும் சினிமாவில் நடித்தவரான நடிகர் பாபுதான் விவேக் ரோலில் நடித்தவராம். இதை அவரே வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. விவேக் சார் வேடத்தை நான்தான் செய்தேன். அவரது இடத்தை நிரப்புவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. விவேக் சார் வேடத்தில் நடித்த அனுபவம் பெரியது. ஒவ்வொரு முறையும் விவேக்காக உணர்ந்து நான் நடித்தேன்.
இயக்குநர் ஷங்கர் சார் ஒவ்வொரு சீனிலும் சொல்லிக் கொடுத்தார். வழக்கமான விவேக் சார் சாயல் இல்லாமல் இதில் வேறு மாதிரியான ஸ்டைல் பாலோ பண்ணிருக்காங்க. நான் நடிக்கும்போது அதிலிருந்து மாறினால் கூட ஷங்கர் சார் சொல்லிக் கொடுத்துத் திருத்துவார். இது எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்று கூறி நெகிழ்ந்துள்ளார் பாபு.
பாபுவும், விவேக்கும் இணைந்து பல படங்களில் காமெடி செய்துள்ளனர். ஒரு படத்தில் இன்டர்வியூவுக்குப் போகும் போது விவேக் சாக்கடையில் விழுந்து விடுவார். அந்தக் காட்சியில் பாபுவும், அவரும் சூப்பராக காமெடி செய்திருப்பார்கள். அதேபோல மைனர் குஞ்சுமணியாக ஒரு படத்தில் பாபு வருவார். அவரை வைத்து விவேக் செய்யும் காமெடிக் காட்சிகள் அப்போது மிகப் பிரபலமாக இருந்தது. இப்போது விவேக் வேடத்தில் பாபு நடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}