சென்னை: யூட்யூப் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகராக மாறிய பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். குடிப்பழக்கத்தால் இவரது உயிர் பறி போயுள்ளது.
பிளாக் ஷீப் youtube சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் திரைத்துறையில் ஒரு காமெடி நடிகராக அவதாரம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவே பொன்மகள் வந்தாள், கோமாளி, ஏ ஒன், ஜாம்பி, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குடிப்பழக்கம் இருந்த பிஜிலி ரமேஷ் அளவுக்கு அதிகமாக குடித்துக் குடித்து உடலைக் கெடுத்துக் கொண்டார். கடந்த சில மாதங்களாகவே பிஜிலி ரமேஷுக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
46 வயதான அவர், இன்று அதிகாலை பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இதற்காக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
குடிப்பழக்கத்தால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். குடிக்கு அடிமையாகி குடும்பத்தைத் தொலைத்து, உடல் நலனைத் தொலைத்து எத்தனையோ பேர் சீரழிந்து போகின்றனர். இதே சினிமா உலகில் குடிக்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டு படித்து பட்டம் பல பெற்று குடும்பத்தை சூப்பராக பார்க்கும் முத்துக்காளையும் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டுதான் உள்ளார். ஆனால் பிஜிலி ரமேஷ் அந்தக் குடியிலிருந்து மீள முடியாமல் கடைசியில் அதற்குப் பலியாகியிருப்பது பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
இதைப் பார்த்தாவது நாலு பேர் குடியை விட்டால் கூட நல்லது.. ஆனால் செய்வார்களா என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}