திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்

Nov 26, 2024,06:54 PM IST

புதுச்சேரி: திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல. விஜய்யின் எழுச்சி பிரமாதமாக தான் இருக்கிறது என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.


கொரோனா காலத்தின் போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியை  திரைத்துறையை சார்ந்த பலர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புகளுக்கான கட்டணத்தை வெகுவாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் முதலமைச்சர் ரங்கசாமியை புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார். 


அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், முன்னர் எல்லாம் படப்பிடிப்பிற்கு 28,000 ரூபாயாக இருந்தது 15,000 ரூபாயாகவும், சீரியலுக்கு  எல்லாம் 18,000 ரூபாயாக இருந்தது 10,000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கான கட்டணத்தை குறைத்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.  இந்த கட்டணம் இன்னமும் குறைக்கப்பட்டால் புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும், நிறைய படப்பிடிப்புகள் நடைபெறும். உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று. 




ரஜினி சார் அரசியலுக்கு வரும் போது அவர் வந்து என்ன பண்ணீற போராருனு இருந்துச்சு. அதே போல கமல் சார் அரசியலுக்கு வரும் போதும் இவரு எண்ண பண்ணீற போராருனு இருந்துச்சு. இப்ப விஜய் வரும் போதும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தா கூட அவருடைய எழுச்சி பிரமாதமாக இருக்கு. அவரு பர்ஸ்ட் மேடையிலேயே பர்ஸ்ட் மேடைன்னு தெரியாத அளவிற்கு ரொம்ப பிரமாதப் படுத்திவிட்டார். அடுத்து அடுத்து அவருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கு. 


அவரு திமுகவை எதிர்க்கிறது தான் சரியான அரசியல். அரசியல்னா யாரு ஆட்சியல இருக்காங்களோ அவங்கள எதிர்க்கனும். அதை தான் எம்ஜிஆரும் செய்தார். யாரு வந்தாலும் அதை தான் பண்ணுவார்கள். தனிப்பட்ட விதத்தில  திமுக மேல எந்த வித விறுப்பு வெறுப்பு இருக்கிறதுங்கிறத மீறி ஆளும் கட்சியை எதிர்த்தால் தான்  உண்மையான ஹீரோவாக மாற முடியும். அது தான் சரி. அது சரியாக தான் இருக்கிறது.தவிர்க்க முடியாத சக்தியாக விஜய் ஆரம்பிச்சு இருக்காரு.


எனக்கு அரசியலில் பயங்கர ஈடுபாடு இருக்கிறது. அது தனிப்பட்ட அரசியலாக தான் இருக்கும். யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். என்னுடைய புதிய பாதை படத்தில் இருந்து எல்லாப் படங்களிலும் அரசியல் இருக்கும். வறுமையில ஏழ்மையில இருக்குறவங்களுக்காக நான் குரல் கொடுத்திருப்பேன். எனக்கும் அரசியல் விருப்பம் இருக்கு. ஆனா இப்ப இல்ல.பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குனு தான் நான் நினைக்கிறேன். முன்னாடியை  வீட இப்ப பெண்கள் பாதுகாப்பாக இருக்காங்க. பெண் வந்து ஒரு வீக்கானவங்க இல்ல. ஆண் தான் வீக்காக இருப்பான். பெண் எப்பவும் பவர் புல்லாக தான் இருப்பாங்க. நான் பார்த்த என்னுடைய தாயோ, மகளோ அவங்க எல்லாம் ரொம்ப ஸ்டிராங் . அவங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு தேவையில்லை.அவங்களே அவங்கள பாதுகாத்துக்குறுவாங்கன்றது என்னுடைய நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தான் தொடர்ந்து 3வது நாளாக ட்ரோன் தாக்குதல்.. அவசர அவசரமாக மக்கள் வெளியேற்றம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இந்தியாவில் போர் பதற்ற சூழல்.. மே 15 வரை விமான நிலையங்கள் மூடல்

news

ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ

news

திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

news

No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை

news

பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?

news

அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்