மும்பை: நடிகரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான கோவிந்தா, தனது வீட்டில் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக டிரிக்கரில் கை பட்டு அது அழுத்தி தோட்டா, காலில் பாய்ந்து விட்டது. காயத்துடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோவிந்தாவுக்கு அபாயகரமான காயம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் கோவிந்தா, பிரபல இந்தி நடிகர். இந்தி, போஜ்பூரி என பல்வேறு படங்களில் கோவிந்தா நடித்துள்ளார். முன்னணி நடிகரான அவர் சிவசேனா கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று காலை தனது வீட்டில் தன்னுடைய தனிப்பட்ட ரிவால்வரை அவர் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை டிரிக்கரை அழுத்தி விட்டது போலும். இதனால் தோட்டா அவரது காலில் பாய்ந்துள்ளது.
காலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததால் வலியால் துடித்துள்ளார் கோவிந்தா. உடனடியாக அவரை வீட்டில் இருந்தோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}