ரவி மோகன் என்றே இனி என்னை அழையுங்கள்.. தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் நடிகர் (ஜெயம்) ரவி!

Jan 13, 2025,05:57 PM IST

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றியுள்ளார். புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார். தன்னை ஜெயம் ரவி என இனி யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் (ஜெயம்) ரவி. நாளை அவர் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை  படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவி. அதில் அவர் கூறியிருப்பதாவது:


அன்பான ரசிகர்கள் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள்


அசாத்திய நம்பிக்கை அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில் உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.




என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும் தற்போதும் எவ்வித மாற்றம் இன்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில் தாங்களும் சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள் அன்பு ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை அன்பு மட்டும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.


இந்த நாள் தொடங்கி நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும். என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும் ஜெயம் ரவி என்ற பெயரில் இனிவரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அன்பு அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும் நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டுவர உதவும்.


என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும் ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவு அளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது. இது நான் பெற்ற அன்பையும் ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயபூர்வமான முயற்சி.


தமிழ் மக்கள் ஆசியுடன் என் ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்றே என்னை அழைக்குமாறும் புதிய நோக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


உங்களது ஊக்கம் தான் எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம் என்று கூறியுள்ளார் நடிகர் ரவி மோகன்.


ரவி மோகனுக்கு நாமும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்