சென்னை: தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படம் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியாகும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
36 வருடங்களுக்குப் பிறகு பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப்( thug life) .இப்படத்தில் நடிகர் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தக் லைஃப் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 45 நிமிடம் கொண்ட இப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலானது. அதே சமயத்தில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்த காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற தக்லைஃப் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், தக்லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு, 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியாகும். இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் NETFLIX ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு என கூறியுள்ளார்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}