சென்னை: சினிமா கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை. இனிமேல் என்னை யாரும் உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் தனது ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்து தற்போது வரை தனது தனி திறமையை நிலைநாட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது அசத்தலான நடிப்பில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். கமலஹாசனை ரசிகர்கள், உலக நாயகன் கமலஹாசன் என அழைத்து வருகின்றனர்.
ஆம்ப காலத்தில் காதல் இளவரசன்று கமல்ஹாசனை ரசிகர்கள் அழைத்தனர். அவ்வப்போது பல்வேறு பட்டப் பெயர்களில் அழைத்து வந்த கமல்ஹாசனை, உலக நாயகன் என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்தான் முதலில் அடையாளப்படுத்தி அழைக்க ஆரம்பித்தார். பிறகு இந்தப் பெயரே நிலைத்து விட்டது.
கமலஹாசன் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது 70 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இந்த நிலையில் கமலஹாசன் இனிமேல் என்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
என் மீது கொண்ட அன்பினால் உலகநாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டு சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்திருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.
சினிமாக் கலை எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது. அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்து தான் சினிமா உருவாகிறது.
கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்த்துபவனாகவும் தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
அதனால் தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதை குறைவும் வந்துவிடாத வண்ணம், அவற்றை துறப்பது என்பதே அது என பதிவிட்டுள்ளார்.
அஜீத் பாணியில்
சில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் நடிகர் அஜீத்தும் தன்னை எந்தப் பட்டப் பெயராலும் அழைக்க வேண்டாம். அஜீத் என்றோ அஜீத் குமார் என்றோ அல்லது ஏகே என்றோ அழைத்தால் போதுமானது என்று கூறியிருந்தார் அஜீத். அவருக்குப் பிறகு கமல்ஹாசன் தன்னுடைய பட்டங்களை துறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில்தான் இப்படி நடிகர்களை விதம் விதமான பட்டப் பெயர்களால் அழைக்கும் கெட்ட பழக்கம் இருந்து வருகிறது. பெரும்பாலான நடிகர்கள் இதை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள். அஜீத், கமல்ஹாசன் போன்றோர் இந்த பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}