சென்னை: கலை மற்றும் சமூகத்திற்கு என் தந்தை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் , தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

ஒரு நடிகராக பல தலைமுறைகளைக் கவர்ந்ததோடு, ஓவியக் கனவு மீது கொண்ட பேராதரவு அப்பாவின் வாழ்க்கையை தனித்துவம் ஆக்கியது.
கம்பன் என் காதலன், திருக்குறள் 100, மகாபாரத உரை போன்ற பெரும் இலக்கியங்களை மக்கள் மனங்களில் நவீனமாக பதிய வைத்து அவரின் பணி, தமிழ் மரபை பாதுகாக்கும் வாழ்நாள் அர்ப்பணிப்பு.
அப்பாவின் கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் கைகளால் அப்பாவுக்கு வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், எங்களுக்கும், கலை உலகிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.
இந்த அங்கீகாரம் அவரது ஆழ்ந்த உழைப்புக்கும் கலை இலக்கிய ஈடுபாடுக்கும் கிடைத்த உரிய மரியாதை.
ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகர் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}