சென்னை: என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்பதை கூற முடியவில்லை என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் ஸ்வாமி நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான படம் மெய்யழகன். கோவிந்த் வசந்தா இசையில், நடிகர் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, கருணாகரன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.
நடிகர் நாகர்ஜூனா இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சகோதரர் கார்த்தி.. நீங்கள் நடித்த மெய்யழகன் படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்தசாமியும் நன்றாக நடித்திருந்தீர்கள். நீங்கள் வரும் காட்சி எல்லாம் புன்னகையோடு பார்த்து ரசித்தேன். பின்பு அதே புன்னகையோடு தூங்கச் சென்றேன். என் சிறு வயது நினைவுகளை நினைவூட்டியது, அதோடு பட நினைவுகளும் வந்தது. மெய்யழகன் படத்தை மக்களும் விமர்சனங்களும் மனதார பாராட்டுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மெய்யழகன் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் கார்த்தி, நாகர்ஜூனாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில், நல்ல சினிமாக்களை நீங்கள் பாராட்டுவது எங்களை சிறந்து விளங்க தூண்டுகிறது என தெரிவித்திருந்தார். மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மெய்யழகன் கதையை நான் படித்தபோது, என் மனம் அன்பால் நிறைந்து இருந்தது. அதே அன்பை நீங்களும் உணர வேண்டும் என விரும்பினேன். இது உங்களுக்கு புதிதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதை கூறமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவின் 15 நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. அதிரடியாக முறியடித்த ராணுவம்!
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?
Rain forecast: தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கு.. என்ஜாய்!
ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!