மன்சூர் அலிகான் போட்டி.. ஆரணி மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. சூப்பர் சம்பவம் on the way!

Feb 28, 2024,06:46 PM IST
சென்னை: நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் முன்பு தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த கட்சியின் பெயரை தற்போது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். இந்த பெயர் மாற்றத்தை கடந்த குடியரசு தினத்தில் அறிவித்தார். 

எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும். பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம். இதற்காக இந்தியா முழுவதும் நாங்கள் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம். மற்றவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதை பார்த்து பார்த்து பெரும் பசியில் இருக்கிறோம். அதனால் எங்கள் அரசியல் இனி தீவிரமான அரசியலாக இருக்கும் என்று மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.




இந்நிலையில் நடிகரும், நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மயிலம் மக்கள் மனம், மகிழம் பூ வாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ன பட்சினியே, நினை, என் மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயாய், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே! என்று கூறியுள்ளார்.

அதாவது ஆரணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களை வைத்து இந்த அறிக்கையைத் தீட்டி அசத்தியுள்ளார் மன்சூர் அலிகான். 

2019ல் திண்டுக்கல்லில் அசத்திய மன்சூர் அலிகான்

கடந்த முறை 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான். மற்ற வேட்பாளர்களை போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் பிச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். டீக்கடைக்குள் போய் இவரே டீ ஆத்துவதும், திண்டுக்கல்லில் துப்புரவு தொழிலாளர்களிடம் கூடையை வாங்கி குப்பைகளை வண்டியில் போடுவதும், வீட்டு வாசலில் சட்னி அரைத்து கொண்டிருந்த பெண்ணிடம் வம்படியாக அம்மியை வாங்கி வெங்காயம் தேங்காய் வைத்து சட்னி அரைத்து தருவதும், இளநீர் கடையில் அவரே அரிவாளை எடுத்து சுழற்றி சரசரவென இளநீர் வெட்டுவதும் என்று அதகளம் செய்தார்.




அத்தோடு விட்டாரா,  செருப்பு தொழிலாளியிடம் சென்று ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும் பட்டையைக் கிளப்பினார். இப்படி தொகுதி முழுவதும் சூறாவளியாக சுழன்று, வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்தார் மன்சூர் அலிகான். இவர் செய்த பிரச்சாரம் மக்கள் அனைவரும் சிரிக்கும் படியாக ரசிக்கும்படியாக இருந்தது. 

சென்ற முறை பிரச்சாரத்தின் போது திண்டுக்கல்லில், கலகலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான் இந்த முறை ஆரணி தொகுதியில் போட்டியிட்டு எப்படியெல்லாம் அதகளம் செய்யப் போகிறாரோ என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்