சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் ஒரு அதிரடி காட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவில் கூட்டணி சேர இணைவதற்கு முயற்சி செய்த நிலையில், அது கை கூடாமல் போய், கடைசியில் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மன்சூர் அலிகான் இன்று காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் தேசிய புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான்.
சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த அவர் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கட்சியில் சேர விரும்பி அதற்கான விண்ணப்பம் அளித்துள்ளார்.
பிரபல நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு தேர்தல் ஆணையம் பலாப்பழ சின்னத்தை ஒதுக்கி இருந்தது. லோக்சபா தேர்தலுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது தேர்தல் வருவதற்கு இரண்டு நாள் முன்பு திடீரென அவருக்கு மயக்கம் வந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எனக்கு யாரோ விஷம் கலந்த பானத்தை கொடுத்து விட்டார்கள் என பரபரப்பை ஏற்படுத்தினார்.
லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மன்சூர் அலிகான் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக பலவகையில் முயற்சி செய்தார். ஆனால் இந்த முயற்சி எதுவும் கைகூடவில்லை. அதனால் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். தீவிரப் பிரச்சாரமும் செய்தார். தற்போது தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
மன்சூர் அலிகான் வருகை குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், இது தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸில் இணைய முடியாது. தேர்தல் முடிந்த பின்னரே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
பல கட்சி கண்ட மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவளித்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்து அக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த வருடம் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை ஆரம்பித்தார். தற்போது நடந்து முடிந்துள்ள பதினெட்டாவது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் இணைய முயன்றார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்து. பின்னர் சுயேட்சையாக வேலூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}