சென்னை:நடிகர் பார்த்திபன் கனவு கண்டாராம். அதிலும் ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் குறித்து உரையாடல் நிகழ்த்தினாராம். யாருடன் உரையாடல் நிகழ்த்தி கனவு கண்டார் என்ற பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ஒருவேளை பார்த்திபன் அரசியலில் இணைய விருப்பம் தெரிவிக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் கூட நடிகர் பார்த்திபனின் எதார்த்தமான நடிப்பு, கலகலப்பான பேச்சு, மனதில் பட்டதை உடனடியாக பேசும் தைரியம் என அனைத்தும் ரசிகர்களையும் நடிகர்களையும் ஈர்த்தது. நடிப்பு மட்டுமல்லாமல் இவரின் காமெடிகளை அதிகம் ரசிக்க தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதே சமயத்தில் அவ்வப்போது சோசியல் மீடியாக்கள் மூலம் தனது குரலை பதிவு செய்து கொண்டே வருபவர். அந்த வகையில் உச்ச நடிகரான விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவளித்த நடிகர்களில் ஒருவர் தான் பார்த்திபன். இவர் விஜய் நடத்திய மாநாடு ,பரந்தூர் விசிட், போன்றவை குறித்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வந்தார் . இதனால் ஒருவேளை பார்த்திபன் விஜய்யின் கட்சியில் இணைய விரும்புகிறாரோ என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ரசிகர்களின் சந்தேகங்களை போக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் பார்த்திபன். அந்த பேட்டியில், மக்களுக்கு நல்லது செய்ய விஜய் விரும்புகிறார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு ஏற்படாத இடர்களே கிடையாது. விஜயகாந்திற்க்கும் அதையே செய்தனர். எப்போதும் ஆளுங்கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த இடத்திற்கு செல்ல முடியும். ஆளும் கட்சியை எதிர்த்துதான் வர வேண்டும். நடுநிலையோடு செயல்பட முடியாது. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை . என்னை விஜய் கட்சிக்கு அழைத்தாலும் நான் கட்சிகள் சேரப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று திடீரென நடிகர் பார்த்திபன், வடிவேலு பார்த்திபன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெற்றிக்கான தேர்தல் கூட்டணி என்னானு தெரியாது. ஆனா.. என்ற கேப்ஷனை பதிவிட்டிருந்தார். இதனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பார்த்திபன் வடிவேலு இணைந்து நடிக்கிறார்களா அல்லது அரசியல் தொடர்பாக பதிவிட்டிருக்கிறாரா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது தவெக தலைவர் விஜயுடன் இணைந்து அரசியல் வியூகம் தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளை பேசியது போன்று கனவு கண்டாராம் நடிகர் பார்த்திபன். இதனால் நடிகர் பார்த்திபன் தவெகாவில் இணையப் போகிறாரா அல்லது இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கிறா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்த அவரது முழு நீள பதிவில்,
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..
அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ?
ஆனா சத்தியமா வந்தது.
கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}