சென்னை: லியோ படத்தில் விஜய்யின் கேரக்டரின் பெயர் பார்த்திபன். இதை வைத்து ஒரு குசும்புக்காரர், விஜய்யின் லியோ முகத்தில் நடிகர் பார்த்திபனின் முகத்தை ஒட்டி கலகலப்பாக்கியுள்ளார்.
லியோ படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு என வெளியான எல்லா மொழிகளிலும் படம் ஹிட்டாகி விட்டது. இந்த படத்தில் பார்த்திபன் , லியோ என்று இரு வேறு பெயர்களில் விஜய் நடித்துள்ளார். அதாவது ஒரே கேரக்டர்தான்.. ஆனால் இரு பெயர்களில் படத்தில் வருவார் விஜய்.
இதில் ஒரு பெயர் பார்த்திபன்.. இன்னொரு பெயர் லியோ. இந்த பார்த்திபன் என்ற பெயர் நம்ம மக்களுக்கு ஏற்கனவே ரொம்பப் பரிச்சயமானதுதான்.. பார்த்திபன் கனவு முதல்.. "புதுமைப்பித்தன்" நடிகர் - இயக்குநர் பார்த்திபன் வரை பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த பின்னணியில் ஒரு குசும்புக்காரர், லியோ விஜய் முகத்தில் நடிகர் பார்த்திபன் முகத்தைப் பொறுத்தி கலகலப்பாக்கியுள்ளார். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்தப் படத்தை நடிகர் பார்த்திபனே பார்த்து வியந்து ஆச்சரியப்பட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ளார்.
கூடவே, Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு என்றும் வியந்துள்ளார். இது ஏஐ காலம்.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. பார்த்திபனை விஜய் ஆக்கலாம்.. விஜய்யை பார்த்திபன் ஆக்கலாம். இருவரையும் எம்ஜிஆர் சிவாஜி ஆக்கலாம்.. கமல் ரஜினி ஆக்கலாம்.. "லாம்"தான்.. படம் ஒரிஜினல் எப்பவும் ஒரிஜினல்தான்.. !
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}