தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் பிரசாந்த் நிவாரண பொருட்களை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழையில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6000மும், மற்றவர்களுக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமீபத்தில்தான் நடிகர் விஜய் தூத்துகுடி, நெல்லை மக்களுக்கு நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை நேரில் வந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரஷாந்த்தும் நேரில் வந்து உதவிகளை வழங்கி மக்களை மகிழ்வித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}