சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 4ம் தேதி நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார்.இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கூலி படப்பிடிப்பிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் தான் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் ரஜினிகாந்திற்கு தீராத வயிற்று வழி ஏற்பட்டதால் நள்ளிரவில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய் சிகிச்சை நிபுரணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழு ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தார். இதய குழாய் ரத்த நாளங்கள் சீராக உள்ளதா? என்பது குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் தமனியில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை சரிசெய்யும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார். ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது என்றும், அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ரஜினிகாந்த நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}