சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் படப்படிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170வது படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் 600 கோடி அளவில் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது மும்பையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த்-மஞ்சு வாரியர் பாடல் காட்சிகள் மலையாள பட ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினி காரை விட்டு இறங்கி கம்பீரமாக நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}