கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. சீமான் மீது ராஜ்கிரண் மறைமுக தாக்கு!

Aug 01, 2023,01:39 PM IST
சென்னை: இயக்குநர் - நடிகர் ராஜ்கிரண் போட்டுள்ள முகநூல் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் பொறுமை காக்க என்ன காரணம் தெரியுமா என்று கூறி அவர் ஒரு பதிவைப் போட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகர் ராஜ்கிரண் சமூக பொறுப்பும், அக்கறையும் உள்ள நபராகவும் வலம் வருகிறார். விளம்பரங்களில் நடிக்கக் கூட மறுத்து விட்டவர் அவர். நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார். அடிக்கடி தனது முகநூலில் சமூக அக்கறையுடன் கருத்துக்களைத் தெரிவிப்பதும் வழக்கமாகும்.



இந்த நிலையில் தற்போது அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவரது கோபமும், குமுறலும் வெளிப்பட்டுள்ளது. ராஜ்கிரண் போட்டுள்ள பதிவு இதுதான்:

இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு 
அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
தங்களால் முடிந்த உதவிகளை
பிற சமுதாயத்தினருக்கும்
செய்து கொண்டு, அமைதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் 
பின்பற்றுவதால், 
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்...

இந்தப்பொறுமையை,
தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட
கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.

சீமானுக்கு பதிலடியா?

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சமீபத்தில் முஸ்லீம்களையும், கிறிஸ்வதர்களையும் விமர்சித்துப் பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தப் பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சீமானுக்கு அளித்துள்ள பதிலா இந்த கோபப் பதிவு என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்