சென்னை: அடுப்பே பற்ற வைக்காமல் சமையல் பண்ண முடியுமா.. ஏன் முடியாது.. "ராஜமாதா" ரம்யா கிருஷ்ணன் நினைச்சா முடியும்.. ஆனால் அவங்க செஞ்சதுதான் சூப்பரான டிஷ்.. அதுக்கு அடுப்பே தேவையில்லை என்பது நம்மிள் எத்தனை பேருக்குத் தெரியும்!!
ரம்யா கிருஷ்ணன் செய்த டிஷ்தான் தற்போது வைரலாகி வருகிறது. இது என்ன ஆவக்காய் பச்சடியா.. இல்லை மாங்கா ஊறுகாயா.. ஆனால் சூப்பரா இருக்கு.. பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் தனது நடிப்பின் திறமையால் மிகவும் பிரபலமானவர். கேப்டன் பிரபாகரன், அம்மன், பஞ்சதந்திரம், உள்ளிட்ட பல படங்களில் தனது கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக காலூன்றினார்.
ரஜினிகாந்த்தின் படையப்பா, கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் இவரது நடிப்புத் திறமைக்கு சிறந்த உதாரணம். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் படையப்பா படத்தில் வில்லியாகவும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நீலாம்பரி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இன்றளவு பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்டாக இவர் கலக்கியது என்றால் அது பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 இல் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்துதான். அதில் பலரது மனதையும் கவர்ந்தவர். இவரது ரோல் விமர்சன ரீதியாக பலத்த பாராட்டுக்களைப் பெற்றது. இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் குயின் என்ற வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார். அந்த அளவுக்கு திறமை வாய்ந்த ஒரு நட்சத்திரம் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் என்பது பொருந்தும்.
என்னதான் ஹீரோயின் ஆக இருந்தாலும் குடும்பத் தலைவி என்று வந்துவிட்டால் கிச்சனுக்குள் போகாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இல்லத்தரசிகள், அவர்களின் பொறுப்பையும் கடமையும் உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் ஒரு குடும்பத் தலைவியாக அடுப்பே பற்ற வைக்காமல் கிச்சனைக் கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவக்காய் பச்சடி அல்லது மாங்காய் ஊறுகாயை அவர் தயார் செய்கிறார். பார்ப்பதற்கே வாயில் எச்சில் ஊறுகிறது. அந்த அளவிற்கு ஆவக்காயுடன், உப்பு, மிளகாய் பொடி, எண்ணெய், எல்லாம் சேர்த்து அதை ஒரு கலவை ஆக்கி வீடியோ போட்டுள்ளார். பிரிபரேஷனைப் பார்க்கும்போதே இத்தனை ஆசையாக இருக்கிறதே.. சாப்பிட்டுப் பார்த்தால் ஆஹா.. டேஸ்ட்டாக இருக்கும் என்று பலரும் உச்சுக் கொட்டி வருகிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு தனது புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். இவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்களைக் காணவே ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வரிசையில் இந்த ஆவக்காய் வீடியோவும் வைரலாகி விட்டது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
{{comments.comment}}