பெங்களூரு: நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படம் தொடர்பான புரோமா நிகழ்ச்சியில் புகுந்த கன்னட அமைப்பினர், விழாவை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கலாட்டாவில் ஈடுபட்டதால் சித்தார்த் தனது நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றார்.
கன்னட அமைப்பினர் நடந்து கொண்ட அநாகரீக செயலுக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியினரையும், தலைவர்களையும், உருப்படாத எம்.பிக்களையும்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். மாறாக அப்பாவி மக்களையும், சம்பந்தமே இல்லாத திரைப்படக் கலைஞர்களையும் இப்படி அநாகரீகமாக மிரட்டுவது மிகவும் தவறானது என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தருவதில் பல காமாகவே கர்நாடக அரசு பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையம் உத்தரவிட்டாலும் சரி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும் சரி அதை நிறைவேற்றுவதில் மிக மிக யோசனை செய்கிறார்கள், தாமதம் செய்கிறார்கள். உத்தரவுகளை நிறைவேற்றாமல் தவிர்க்கும் செயல்களிலும் ஈடுபடுவார்கள்.
அரசுக்கு பல்முனைகளில் நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அங்கு விவசாயிகள் தூண்டி விடப்படுவார்கள்.. போராட்டங்கள் வெடிக்கும்.. வன்முறை வெடிக்கும்.. அப்பாவி தமிழர்கள் குறி வைக்கப்படுவார்கள்.. இந்த வன்முறையைக் காரணம் காட்டி அரசுகள், தங்களது கடமையிலிருந்து தவறி விடும். இதுதான் காலம் காலமாக அங்கு நடந்து வருகிறது.
இப்போதும் அங்கு காவிரிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த முறையும் விவசாயிகள் தூண்டி விடப்பட்டுள்ளனர். அடக்குமுறை அடாவடிகளில் சில கன்னட அமைப்பினர் இறங்கியுள்ளனர். நேற்று பெங்களூரில் சித்தார்த் நடித்த சித்தா படத்தின் புரமோவுக்காக சித்தார்த் வந்திருந்தார். பிரஸ் மீட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது கன்னட அமைப்பினர் உள்ளே புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இந்த மாதிரி நேரத்தில் தமிழ்ப் படத்துக்கு புரமோஷன் தேவையா..உடனே கிளம்புங்க.. பேசக் கூடாது என்று கூறி அடாவடி செய்தனர். அவர்கள் கோபமாக பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த் எழுந்திருக்கவில்லை. அமைதியாக புன்னகை பூத்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு அவரே எழுந்து பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த செய்தியாளர்களைக் கும்பிட்டு விட்டு கிளம்பிச் சென்றார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், தமிழின் மிக முக்கிய நடிகருமான பிரகாஷ் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். கன்னட மக்கள் சார்பாக சித்தார்த்திடம் ஸாரி கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 20, 2025... இன்று எண்ணங்கள் ஈடேறும்
விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்து வரக் கூடாது.. மரங்களில் ஏறக் கூடாது.. தவெக கோரிக்கை
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
பாமக.,வின் மாம்பழச் சின்னம்...அன்புமணிக்கு கிடைத்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்
ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!
மர்ம நபரால் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை!
ஒருவர் மயங்கி விழுந்தால் உடனடியாக என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியுமா?
{{comments.comment}}