சென்னை: நான் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை. இந்தத் தகவல் எங்கிருந்து கிளம்பியது என்றே எனக்குத் தெரியவில்லை. ராமாயணா திரைப்படத்தின் ஒரு பகுதியாக நான் இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் விஜய் சேதுபதி. தற்போது டிரெய்ன், ஸ்லம்டாக், 33 டெம்பிள் ரோடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் அரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட அளவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல்கள் பரவிய வந்தது.

இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ், சன்னி தியோல், ரவி துபே ஆகியோர் நடிக்கின்றனர். பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா' குறித்த வதந்திகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதி, இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை. இந்தத் தகவல் எங்கிருந்து கிளம்பியது என்றே எனக்குத் தெரியவில்லை. ராமாயணா திரைப்படத்தின் ஒரு பகுதியாக நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}