ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!

Sep 16, 2024,04:01 PM IST

சென்னை: முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த் மற்றும் அதிதி ராவின் திருமண வைபோகம் எளிமையான முறையில் கோவிலில் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன், அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


சூர்யா நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சித்தார்த். இதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனது எதார்த்தமான  நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் நல்ல  கதையம்சம் கொண்ட படமாக மக்களிடையே பாராட்டை பெற்றது . தற்போது இவர் ஒரு நடிகனாக,  தயாரிப்பாளராக,  பாடகராக, பன்முக திறமைக் கொண்ட நடிகராக உயர்ந்துள்ளார். 45 வயதாகும் சித்தார்த் ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே 2007 ஆம் ஆண்டு பிரிந்தார்பாலிவுட் நடிகையாக இருக்கும் அதிதி ராவ், தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் தெலுங்கில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்தது. இந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. இதற்கிடையே சித்தார்த், அதிதி ராவ் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. பின்னர்  இதனை உறுதிப்படுத்தவே இவர்களுக்கு  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடுவோம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.




இந்த நிலையில் தெலுங்கானா வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற ரங்கநாயக சுவாமி கோவிலில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் அவர்களின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இரண்டு வருடமாக காதலித்த அதிதிராவை கரம் பிடித்த சித்தார்த் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தம்பதிகளின் திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்